• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3கோடியாக அதிகரிப்பு

Byவிஷா

Jun 27, 2024

தமிழகத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.3 கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20ம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் ஜூன் 29ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் 16 அமர்வுகளில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். அதில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது.
இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 2022ல் ஏற்றுமதி குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது. ஒசூரில் 2000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்படும். திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்” என அறிவித்துள்ளார். அந்த வகையில் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதற்கு முன் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியில் ரூ. 2 கோடியை மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்கள் செலவிட அனுமதி இருந்தது. மீதமுள்ள ரூ.1 கோடியை அரசு பரிந்துரைக்கும் திட்டத்திற்குச் செலவிட வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. இனி ரூ.3 கோடியையும் தொகுதி வளர்ச்சி நிதிக்காக எம்எல்ஏ- க்கள் நேரடியாக திட்டங்களுக்கு செலவிடலாம் எனக் கூறியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பொருள் சேவை வரியையும் நீக்க முதலமைச்சர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.