• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஒக்கனேக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

Byவிஷா

Oct 14, 2024

கனமழை காரணமாக ஒக்கனேக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பபட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாக இருந்தது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வருவதால், ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று பிற்பகலில் விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 19,000 கனஅடியாக அதிகரித்தது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார். தொடர் விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நேற்று சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்திருந்தது. ஆனால், அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.