• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

காவல் துறையினரை கண்டித்து தீக்குளிக்க முயன்ற சம்பவம்..,

ByKalamegam Viswanathan

Aug 2, 2025

மதுரை வாடிப்பட்டி அருகே இராமையம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் மனோகரன் அவரது மனைவி வசந்தி மந்தை முத்தாலம்மன் கோவில் அருகில் தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அரசியல்வாதிகள் சிலர் தூண்டுதலின் பேரில் வருவாய்த்துறையினர் காவல் துறையினர் ஆகியோர் கூட்டாக இன்று திடீரென வந்து ஜேசிபி வாகனத்தின் மூலம் வீட்டின் தெற்கு பக்கமாக உள்ள தாழ்வாரத்தை இடித்தனர்.

இது குறித்து தந்தை மனோகரன் அவரது மகள் ஆகியோர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் வருவாய்த்துறை தாசில்தாரிடம் எந்தவித நோட்டீஸும் வழங்காமல் ஏன் இடிக்கிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தி விட்டு தாழ்வாரத்தை இடித்தனர். செய்வதறியாத தவித்த தந்தை மனோகரன் மற்றும் அவரது மகள் ஆகியோர் தங்களின் உடலில்‌ மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தனர். அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தெற்கு பக்கமாக உள்ள வீட்டின் வாசற்படியை ஆக்கிரமிப்பு என்று அரசியல்வாதிகள் சிலர் தூண்டுதலின் பேரில் இடித்ததால் இந்த விளைவு ஏற்பட்டது.

இது குறித்து எந்தவித முன்னறிக்கை இல்லை நோட்டீஸ் வழங்காமல் ஏன் இடிக்கிறீர்கள் என்று கேட்டபோது சோழவந்தான் தொகுதி ஆளுங்கட்சி எம்எல்ஏவின் தலையீடு இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

அதிகாரிகளிடம் கேட்டபோது தகவல் தெரிவித்ததாகவும் கூறுகின்றனர். இது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை செய்து சம்பந்தப்பட்ட மனோகரனுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்பு எடுக்க வேண்டும் என கூறுகின்றனர்.

மேலும் ராமையன்பட்டியில் உள்ள அனைத்து ஆக்கிரமப்புகளும் எடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். இது சம்பந்தமாக வருவாய் ஆய்வாளர் வாடிப்பட்டி வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட எஸ்பி ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் கூறினார்.