• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அதிமுக சார்பில் நீர்மோர்ப்பந்தல் திறப்பு

ByG.Suresh

Apr 26, 2024

சிவகங்கை அருகே காளையார்கோவில் தேரடி பகுதியில் அதிமுக சார்பில் பொதுமக்களின் தாகத்தை தணிக்க உதவும் வகையில் கோடைகால நீர் மோர்ப்பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த சில இரண்டு வாரங்களாக கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. இதனால் ஏற்படும் தாகத்தை சமாளிக்க முடியாமல் பொது மக்கள், முதியோர், பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டுமென நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டார்.
அதனைத்தொடர்ந்து ஒன்றிய அதிமுக சார்பில் காளையார்கோவில் தேரடி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை மாவட்டச்செயலரும், சிவகங்கை சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆர்.செந்தில் நாதன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், தர்பூசணி, இளநீர், சர்பத் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் காளையார்கோவில் மேற்கு ஒன்றியச்செயலாளர் பழனிசாமி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் இன்று மதியம் சுமார் மூன்று மணி அளவில் கலந்து கொண்டனர்.