• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டி அருகே பெண்களுக்கு தொண்டு நிறுவனத்தின் சார்பில், 50 வீடுகள் கட்டி திறப்பு விழா

ByJeisriRam

Sep 8, 2024

ஆண்டிபட்டி அருகே ஆதரவற்ற விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு, பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு தொண்டு நிறுவனத்தின் சார்பில் 50 வீடுகள் கட்டி திறப்பு விழா நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஸ்ரீ ரெங்கபுரம், மணியக்காரன்பட்டி, போடிதாசன்பட்டி உள்ளிட்ட மூன்று கிராமங்களில் உள்ள ஆதரவற்ற விதவை பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்களுக்கு சிலி நாட்டின் செலாவிப் இன்டர்நேஷனல் (Selavip International, Chile) நிதி உதவியுடன் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை (Deet) சார்பில் 50 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதியதாக கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் பிரேமலதா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அறங்காவலர்கள் சிவசக்தி, அந்தோணிசாமி, களபொறியாளர் ராகுல், களப்பணியாளர் ரவி,தன்னார்வலர்கள் குழந்தை ராஜ், சேகர், ஜீவநாதன், கு.பாலமுருகன், ப. பாலமுருகன் மற்றும் நிறுவன திட்ட அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டு கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் இன்று திறந்து வைக்கப்பட்டது.