• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோவையில் போதி மனநல மருத்துவமனை ஏப்ரல் 13ஆம் தேதி துவக்கம் விழா

BySeenu

Apr 10, 2024

கோவை துடியலூரில் உள்ள உமா தேவி மருத்துவமனையில் புதியதாக போதி மைன்ட் கேர் மருத்துவமனை துவக்கப்படவுள்ளது. மனநலத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் அர்ப்பணிப்பு உணர்வோடு சிறப்பான கவனிப்புடன் இது துவங்கப்படவுள்ளது. புதுமையான சிகிச்சையையும் இங்கு மேற்கொள்ளப்படவுள்ளது. முழுமையாக குணமடைதல், நலமுடன் வாழ்தலை நோக்கமாக கொண்டு பல்வேறு சிகிச்சை முறைகளை இது மேற்கொண்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்துடன், அனைவரும் பயன்பெறும் வகையில் உயர்தர சிகிச்சையையும் தரவுள்ளது. இதில் போதி மனநல மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் ராஜா நடராஜன், பேசண்ட் சேப்டி மற்றும் குவாலிட்டி துறையின் இயக்குனர் மருத்துவர் ஸ்ரீதேவி ஆறுமுகம் மற்றும் ஸ்ட்ராட்டிஜி மற்றும் கம்யூனிகேஷன் இயக்குனர் மருத்துவர் கே. வசந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.