திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ 42 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திறப்பு விழாவுக்கு பின் திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு குத்து விளக்கேற்றினார். பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சத்தியவதி பள்ளிக்கல்வி குழு உறுப்பினர் கலையரசி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் செல்வி ராஜவேல், புவனேஸ்வரி உலகநாதன், மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் என பலரும் கலந்து கொண்டனர்.