• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் கழிவுநீர் கால்வாய் அமைக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து, அதிமுக கவுன்சிலர் பேரூராட்சி அலுவலகம் முன் குடில் அமைத்து காத்திருக்கும் போராட்டதில் ஈடுபட்டதால் பரபரப்பு…

ByKalamegam Viswanathan

Sep 20, 2023

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 4 வார்டு RVS நகரில் கழிவுநீர் முறையாக செல்ல கால்வாய் அமைக்காததால் அதிமுக 4 வதுவார்டு கவுன்சிலர் இளங்கோவன் வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலத்தில் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, பேரூராட்சி அதிகாரிகளை கண்டித்து வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன் குடில் அமைத்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கழிவுநீர் செல்ல வழியில்லாததால் டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் உடனடியாக கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதுவரை காத்திருக்கும் போராட்டத்தில ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.