• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் தேமுதிக கட்சியின் சார்பில், விஜயகாந்த் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம்…

ByP.Thangapandi

Aug 25, 2024

உசிலம்பட்டியில் தேமுதிக கட்சியின் சார்பில் விஜயகாந்த் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சியினர் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 72 வது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டப்பட்டு வருகின்ற சூழலில் பொதுமக்களுக்கு உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு தேமுதிக கட்சியின் சார்பில் மாவட்ட பொருளாரும் வழக்கறிஞருமான ரவிச்சந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் தேமுதிக உசிலம்பட்டி நகரச் செயலாளர் அசோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.எஸ். மாணிக்கம், கருமாத்தூர் பாண்டி, ஒன்றிய செயலாளர் சமுத்திரபாண்டி , முன்னாள் கவுன்சிலர் வாசகராஜா, சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் சிவபிராகாஷ், எழுமலை பேரூராட்சி செயலாளர் சேகர் , மாவட்ட விவசாய அணிச் செயலாளர் எம். எஸ். பாண்டியராஜன், கேப்டன் மன்ற துணைச் செயலாளர் வில்லாணி செல்வம் , நகர பொருளாளர் அழகுராஜா, மகளிர் அணி பாண்டியம்மாள் மற்றும் தேமுதிக கட்சியினர் பலர் கலந்து கொண்டுனர்.