உசிலம்பட்டி அருகே மழையால் சாலையில் முறிந்து விழுந்து கிடந்த மரத்தை உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் சாலையிலிருந்து அகற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தொட்டப்பநாயக்கணூர், உத்தப்பநாயக்கணூர், செக்காணூரணி, எழுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பரவலான கனமழை பெய்து வருகிறது.
இன்றும் எழுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலான மழை பெய்தது, இந்த மழையின் காரணமாக உத்தப்புரம் – எழுமலை சாலையில் வாவரகாய்ச்சி மரம் முறிந்து விழுந்து கிடந்தது.

எழுமலை சென்றுவிட்டு உசிலம்பட்டி நோக்கி காரில் வந்து கொண்டிருந்த உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், காரிலிருந்து இறங்கி சாலையில் விழுந்து கிடந்த மரத்தை தனது ஆதரவாளர்களுடன் அகற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ வை எம்எல்ஏ அய்யப்பன், தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ வைரலாகி வருகிறது., மேலும் சாலையிலிருந்து மரத்தை அகற்றிய எம்எல்ஏ அய்யப்பனுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.