• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் விளாச்சேரியில் கோழிக்குஞ்சுகள் மற்றும் முட்டையை விழுங்கிய நல்ல பாம்பு.., அதனை கக்கும் வீடியோ வைரல்…

ByKalamegam Viswanathan

Jan 20, 2024

கோழியை கொன்று விட்டு கோழிகுஞ்சுகள் மற்றும் இரண்டு முட்டைகளை விழுங்கிய தங்க நிற நல்ல பாம்பு.

திருப்பரங்குன்றம் விளாச்சேரி மொட்டைமலை பகுதியில் வசிப்பவர் பிச்சைமுத்து. இவரது வீட்டில் கோழிகள் வளர்த்து வந்துள்ளார். இந்த கோழிகள் அடையும் இடத்தில் ஒரு கோழி முட்டையிட்டு குஞ்சுகள் பொறித்து அடைகாத்து வந்துள்ளது. அப்போது திடீரென புகுந்தா தங்க நிற நல்ல பாம்பு கோழியை கொன்று விட்டு அதன் மூன்று கோழிகுஞ்சுகள் மற்றும் இரண்டு முட்டைகளை விழுங்கி கொண்டிருப்பதை பார்த்து வீட்டின் உரிமையாளர் பிச்சை அதிர்ச்சி அடைந்து திருநகரைச் சேர்ந்த பாம்பு பிடி வீரரான ஸ்நேக் பாபுக்கு தகவல் கொடுத்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்நேக் பாபு நான்காவது குஞ்சை முழுங்குவதற்குள் பாம்பை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் விடுவித்தார்.

மூன்று குஞ்சுகள் இரண்டு முட்டைகளை விழுங்கிய நல்ல பாம்பு அதனை கக்கும் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.