• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

திருச்செங்கோடு நகராட்சியில், கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜை..!

ByNamakkal Anjaneyar

Nov 3, 2023

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மழைக்காலங்களில் அதிகலவில் சாக்கடை நீர் தேங்கி வருவதை அடுத்து, நகராட்சிக்கு உட்பட்ட தினசரி அங்காடி லாரி நிறுத்தும் நிலையம் ஆகிய பகுதிகளில் ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் கழிவு நீர் கால்வாய் அமைக்கவும், குமரேச புறம் பகுதியில் 37 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கவும் பூமி பூஜை இன்று போடப்பட்டது நகர மன்ற தலைவர் நளினி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட தினசரி சந்தை பகுதியில் ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜையை இன்று திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி தலைமையில் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் மதுரா செந்தில் முன்னாள் நகர மன்ற தலைவர் நடேசன் ஆகியோர் முன்னிலையில் போடப்பட்டது திருச்செங்கோடு தினசரி சந்தைக்கு எதிரில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் குமரேசபுரம் பகுதியில் சாலை அமைக்கும் பணி 37 லட்சத்திலும் தொடங்கப்பட உள்ளது இதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது தினசரி சந்தை எதிரே அதிகமான அளவு தண்ணீர் தேங்குவதை தடுக்கவே இந்த கழிவு நீர் வாய்க்கால் அமைக்கப்படுகிறது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படுவதை முன்னிட்டு பொது மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்