• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மூன்று பாடல்களில் தமிழக மக்களை தன் வயப்படுத்திய லதா மங்கேஷ்கர்

இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். 1942ம் ஆண்டு தன்னுடைய திரையுலகப் பயணத்தை ஆரம்பித்த லதா கடந்த 60 வருடங்களில் இந்திய மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

இந்தியில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பல கதாநாயகிகளுக்குப் பாடியள்ளார். தனித்துவமான அவரது குரல் சமீப கால கதாநாயகிகளுக்கும் கூட பொருத்தமாக இருந்தது தமிழ் சினிமாவில் இவர் பாடிய பாடல்கள் மூன்று மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது இருந்த போதிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர்களை காட்டிலும் தமிழ் மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார் லதா மங்கேஷ்கர்.
தமிழில் இவர் பாடியஅந்த மூன்று பாடல்களும் இளையராஜா இசையில் அமைந்தவை.

பிரபு, ராதா மற்றும் பலர் நடித்து இளையராஜா இசையமைப்பில், சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்து வெளிவந்த ‘ஆனந்த்’ படத்தில் இடம் பெற்ற

‘ஆராரோ… ஆராரோ..’ பாடல்தான் அவர் தமிழில் பாடிய முதல் பாடல்

சிவாஜி குடும்பத்தினரும், லதா குடும்பத்தினரும்நெருக்கமானவர்கள் என்பதால் அவரை அழைத்து வந்து இந்தபாடலை பாட வைத்தனர் சிவாஜி குடும்பத்தினர்

இரண்டாவதாக 1988ல் கமல்ஹாசன், அமலா நடித்து இளையராஜா இசையில் வெளிவந்த ‘சத்யா’ படத்தில்

‘வளையோசையில்…கலகலவென…’ பாடலை எஸ்பி பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடினார். இந்தப் பாடல் மாபெரும் ஹிட்டடித்த பாடல்.
இன்றும்மேடைக் கச்சேரிகளில், டிவி நிகழ்ச்சிகளில் இப்பாடல் தவிர்க்க முடியாத பாடலாக இருந்து வருகிறது. லதா மங்கேஷ்கர் என்றாலே தமிழ் சினிமா இசை ரசிகர்களுக்கு இந்தப் பாடல்தான் ஞாபகம் வரும்.

மூன்றாவது மற்றும் கடைசி பாடலாக லதா மங்கேஷ்கர் தமிழில் பாடிய பாடல் இடம் பெற்ற படம் 1988ல் இளையராஜா இசையில் வெளிவந்த ‘என் ஜீவன் பாடுது’. இப்படத்தில்

‘எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்’ என்ற பாடலைத் தனியாகவும், மனோவுடனும் இணைந்து பாடியிருக்கிறார் லதா மங்கேஷ்கர்இந்தப் பாடலும் சூப்பர் ஹிட்டான ஒரு பாடல்.

இவை தவிர்த்து 1991ல் இளையராஜா இசையில் கண்ணுக்கொரு வண்ணக்கிளி என்ற படத்தில் இங்கே பொன் வீணை என்ற பாடலையும்,

கமல்ஹாசன் நடித்த சத்யா படத்தில் இடம்பெறாத ‛இங்கேயும் அங்கேயும்’ என்ற பாடலையும் பாடி உள்ளார்.

இந்த பாடல்களுக்கு முன்பே, 1952ல் வெளியான இந்தி டப்பிங் படமான ‘ஆண் முரட்டு அடியாள்’ (இந்தியில் Aan) என்ற படத்தில் நான்கு பாடல்களையும்,

அதற்குப் பிறகு 1956ல் வெளிவந்த இந்தி டப்பிங் படமான ‘வான ரதம்’ (இந்தியில் Uran Khatola) படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார் லதா மங்கேஷ்கர்.