திருமலாபுரம் ஊராட்சியின் அலட்சியத்தால் வீட்டின் அருகே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளதால் விஷச் சந்துக்களான பாம்பு, தேள் உள்ளிட்டவை வீட்டிற்குள் அடிக்கடி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா திருமலாபுரம் ஊராட்சியின் அலட்சியத்தால், பெருமாள் கோவில் தெருவில் வீட்டின் அருகே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளதால் விஷச்சந்துக்களான பாம்பு, தேள், உள்ளிட்ட வீட்டிற்குள் அடிக்கடி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருமலாபுரம் கிராமத்தில் கழிவுநீர் தேங்கி பொது மக்கள், குழந்தைகளுக்கு நோய் தொற்று அபாயம் உள்ளதாகவும், குடிநீர் குழாயில் கழிவு நீர் கலப்பதாகவும், அருகே உள்ள வீடுகளுக்கு பாம்பு வருவதாகவும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவிக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நேற்று இரண்டு பாம்புகள் வீட்டிற்குள் புகுந்தது,

எனவே உடனடியாக திருமலாபுரம் ஊராட்சி நிர்வாகம் கழிவு நீரை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.
