தேனி நகராட்சி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தலைமையில் அதிரடி ஆய்வு நடத்தி கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்து ஒரு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
தேனி நகராட்சி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் பல்வேறு கடைகளில் திடீரென என்று ஆய்வு நடத்தினார்.
தேனி என்ஆர்டி நகர் பகுதியில் உள்ள சுசி ட்ரேடர்ஸ் என்ற கடையில் குழந்தைகளுக்கு விற்பனை செய்யக்கூடிய காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே பாண்டியன் ட்ரேடர்ஸ் என்ற கடையில் தடை செய்யப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் குளிர்பானங்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த கடையை உடனடியாக பூட்டி சீல் வைத்தனர்.
மேலும், தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆவின் பாலகத்தில் காலாவதியான குளிர்பானங்களை கீழே ஊற்றி அளித்தனர்.
ஸ்ரீ ஹரிஹரன் ட்ரேடர்ஸ் என்ற கடையில் காலாவதியான நூடுல்ஸ் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து அவர்களுக்கும் அபராதம்
விதித்தனர்.
இதேபோல் தேனி நகராட்சி பகுதியில் உள்ள கடைகள், உணவு விடுதிகள், உள்ளிட்ட இடங்களில் திடீரென இன்று உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தலைமையிலான ஆய்வு நடத்தப்பட்டது.