• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மழை வெள்ளத்தை சீரமைக்கும் பணியில்..தமிழக அரசு சிறப்பாக பணியாற்றியுள்ளது..,மதுரையில் ஆதி தமிழர் பேரவைத் தலைவர் பேட்டி..!

ByKalamegam Viswanathan

Dec 11, 2023

தமிழகத்தில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் மழை வெள்ளத்தை சீரமைக்கும் பணியில் தமிழக அரசு சிறப்பாக பணியாற்றியுள்ளது என ஆதி தமிழர் பேரவை நிறுவனரும், தலைவருமான அதியமான் திருமங்கலத்தில் பேட்டி அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஆதி தமிழர் பேரவையின் மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட அணிகளைச் சார்ந்த நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆதித் தமிழர் பேரவையின் நிறுவனரும், தலைவருமான அதியமான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து, நிருபர்களிடம் அளித்த பேட்டியில் அதியமான் தெரிவித்ததாவது..,
தமிழகத்தில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் கடும் மழையால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதை, தமிழக அரசு அதிவேகத்துடன் செயல்பட்டு சிறப்பாக பணியாற்றியது பாராட்டுக்குரியது எனவும், இந்த சிறப்பான நிவாரணப் பணியினை இவர்களை தவிர வே று எவராலும் செய்திருக்க முடியாது, 2015 – ஆண்டில் செயற்கை மழை உண்டானது, அப்போது இருந்த எடப்பாடி பழனிச்சாமி அதற்கான நிவாரண நிதிக்கான கணக்கினை இதுவரை ஒப்படைத்துள்ளாரா? தற்போது இயற்கை மழை கடுமையான புயல் வெள்ளத்தை ஏற்படுத்தியது. இதனை தமிழக அரசு போர்க்கால நடவடிக்கையில் அதிவேகத்தில் செயல்பட்டு சிறப்பாக பணியாற்றியது. அதனை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், அது எங்கே? இது எங்கே? எனப் பேசி பல்வேறு கணக்குகளை கேட்டு, மக்களை திசை திருப்பும் வேலையில் ஈடுபடுகிறார்கள், இது மக்களிடம் எடுபடாது எனவும், இந்தியா கூட்டணி வருகிற 2024-ம் ஆண்டில் அமோக வெற்றி பெறும். தற்போது சில மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வி , இந்தியா கூட்டணிக்கு வலுவை சேர்க்கும் உந்து சக்தியாக ஏற்படுத்தி உள்ளது . ஆகவே இந்தியா கூட்டணி பிரம்மாண்டமான முறையில் அமோக வெற்றி பெறும். அப்போது மோடி ஆட்சி வீட்டுக்கு போவது உறுதி எனவும் தெரிவித்தார்.