• Thu. Dec 12th, 2024

சாலையோர விவசாயிகளின் நலன் கருதி, தமிழக அரசு உழவர் சந்தையில், விவசாயிகள் கடை வைத்து விற்பனை செய்ய அழைப்பு..,

Byadmin

Dec 13, 2023

சாலையோர விவசாயிகளின் நலன் கருதி , தமிழக அரசு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்த உழவர் சந்தையில் , விவசாயிகள் கடை வைத்து விற்பனை செய்ய அழைப்பு. (இலவசமாக எலக்ட்ரானிக் எடை இயந்திரம் மற்றும் பாதுகாப்பாக செய்யப்பட்ட மேற்கூரை , குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் நிலை)

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள உழவர் சந்தையை, தமிழக அரசு புதிதாக சீரமைத்து பேவர் பிளாக் சாலை அமைத்து,மேற்கூரைகள் புதுப்பிக்கப்பட்டும்,விவசாயிகளின் நலன் கருதி தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. 

திருமங்கலம் - உசிலை சாலையில் சாலையோரங்களில் இருபுறமும் பழங்கள்,  மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகள்,  பாதுகாப்பற்ற முறையில் இருப்பதினாலும்,  அவர்களின் நலன் கருதி உழவர் சந்தையில் இலவசமாக அவர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய  80 கடைகளுடன், எலக்ட்ரானிக் எடை இயந்திரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதால், திருமங்கலம் பகுதி விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேளாண் துறை அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.