• Mon. Apr 6th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில், தனியார் நிதி நிறுவன மேலாளருக்கு அரிவாள் வெட்டு…
2 மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு…..

ByKalamegam Viswanathan

Feb 6, 2023

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகேயுள்ள வெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் குருராஜ் (34). இவர் சிவகாசியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று சிவகாசிக்கு சொந்த வேலையாக, தனது இருசக்கர வாகனத்தில் குருராஜ் வந்திருந்தார். காரனேசன் சந்திப்பு அருகே வந்தபோது இவரது இருசக்கர வாகனம் பழுதாகி நின்றது. வண்டியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து கொண்டிருந்த போது, அந்த வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் திடீரென்று மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து குருராஜை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர். படுகாயமடைந்த குருராஜை, அருகிலிருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து, நிதி நிறுவன மேலாளரை அரிவாளால் வெட்டிய 2 மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.