• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பாறை ஓவியங்களில்
வேற்று கிரகமனிதர்கள்…

ByA.Tamilselvan

Apr 28, 2022

வேற்றுகிரக மனிதர்களை குறித்த ஆர்வம் எப்போதும் பூமியில் வாழும் மனிதர்களாகிய நமக்கு உண்டு. பரந்துவிரிந்த பிரபஞ்சத்தில் நாம் தனியாகத்தான் இருக்கிறோமா என்ற கவலை இந்த ஆர்வத்தின் வெளிப்பாடாகவே அவதார் போன்ற சினிமாக்களும் ,நிறைய நாவல்களும் வெளிவந்திருக்கின்றன. இணையதளங்களில் வேற்றுகிரகமனிதர்களைப் பற்றிய காணொளிகள் காணக்கிடைக்கின்றன.
அமெரிக்கா போன்ற நாடுகளில் பறக்கும் தட்டுக்கள் வந்து போவதாக அடிக்கடி உறுதிப்படுத்தபடாத செய்திகள் வருவதுண்டு. அமெரிக்கா திட்டமிட்டே தன்னைபற்றி உருவாக்கும் பில்டப்பாக இருக்கலாம்????…. ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் பறக்கும் தட்டு செய்திகள் வந்ததில்லை … ஆனாலும் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவுக்கு குறிப்பாக வடகிழக்குமாநிலமான சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பாறை ஓவியங்களில் வேற்றுக் கிரகமனிதர்களின் ஓவியங்கள் கிடைத்திருக்கின்றன.
ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் காணப்படுவது போல்
சத்தீஸ்கர் மாநிலத்தின் காங்கர் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் மிகுந்த பஸ்டார் பகுதியில் உள்ள சராமாபாறைகளில் காணப்படும் ஓவியங்களில் அன்னிய கிரகத்தவரும், அறியமுடியாத பறக்கும் தட்டுகளும் காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை. இவற்றை ஆராய்வதற்கு நாசா மற்றும் இஸ்ரோ அமைப்புகளின் உதவியை நாட சத்தீஸ்கர் மாநில தொல்லியல் மற்றும் பண்பாட்டுத் துறை தீர்மானித்துள்ளது. இந்த பாறைகளில் காணப்படும் ஓவியங்களில் உள்ள அன்னிய கிரகத்தவரும், பறக்கும் தட்டுகளும் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் காணப்படுவது போல் உள்ளன என்று தொல்லியல் ஆய்வாளர் ஜே.ஆர்.பகத் கூறுகிறார். சந்தேலி, கோட்டிடோலா ஆகிய கிராமங்களில் இந்தப்பாறைஒவியங்கள் உள்ளன.
சத்தீஸ்கர் பாறை ஓவியங்களில் காணப்படும் அன்னிய கிரகத்தவர்
இக்கிராமங்கள் ரெய்ப்பூரில் இருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ளன. அன்னிய கிரக மனிதர்கள், தட்டுகள் போன்றவை இப்போதும் மக்களிடமும், ஆய்வாளர்களிடமும் ஆர்வத்தைத் தூண்டுவது போல் அன்றும் இவை ஆர்வத்தைக் கிளப்பியுள்ளன. வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மனிதர்கள் தாங்கள் கண்ட அல்லது தங்களுடைய கற்பனையில் உதித்தவற்றை ஓவியமாக வரைந்துள்ளனர் என்பதை இந்த ஓவியங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதுகுறித்து கிராமத்தாரிடம் பல நம்பிக்கைகள் நிலவுகின்றன. பலர் இந்த ஓவியங்களை வணங்குகின்றனர். மற்றும் சிலர் தங்கள் முன்னோர்கள் இந்த சிறிய வடிவம் கொண்ட மனிதர்கள் வானில் இருந்து இறங்குவதைக் கண்டுள்ளனர் என்று கூறுகின்றனர். இவர்கள் வந்ததாக கூறப்படும் வாகனங்கள் திரைப்படங்களில் உள்ளது போல் தென்படுவது ஒரு தற்செயல் ஒற்றுமையே என்று பகத் கூறுகிறார்.இதே போன்று உலகின் பல பகுதிகளில் வேற்றுகிரக மனிதர்களை போன்ற சிற்பங்களே உள்ளன. தலைக் கவசம், மூச்சுக் காற்றுகாக தலைகவசத்துடன் வைக்கப்படும் குழாய்கள் போன்ற அமைப்புடன் சிலைகள் உள்ளன. அவ்வளவு ஏன்? பிரமீடுகளே வேற்று கிரகவாசிகள் கட்டியது தான் என்கிறார்கள் சிலர். பிரமீடு சுவர்களில் காணபபடும் சில ஒவியங்களில் அதற்கான குறியிடுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருத்துகிறார்கள்.