ராஜபாளையத்தில் சி.ஐ.டி.யு சங்கம் சார்பில் சங்க உறுப்பினர்களின் குடும்பத்தில் உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 11வது ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் வைத்து சி.ஐ.டி.யு கார் வேன் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் சங்க உறுப்பினர் குடும்பத்தில் உள்ள 2022 2023 ஆம் ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு குழந்தைகளுக்கு கல்வி பரிசளிப்பு விழா நடைபெற்றது. ராஜபாளையம் நகர மன்ற தலைவி பவித்ராஷியாம் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சி ஐ டி யு டாக்ஸி சங்கத் தலைவர் தங்கவேல், சி ஐ டி யு டாக்ஸி சங்க செயலாளர் கண்ணன். மாவட்ட செயலாளர் தேவா, மாவட்டத் தலைவர் மகாலட்சுமி. சாலைப் போக்குவரத்து மாவட்ட செயலாளர் திருமலை. மாவட்டத் துணைத் தலைவர் கணேசன். கனவினர் சுப்பிரமணியன், டாக்ஸி சங்கத் துணைத் தலைவர் விஜயகுமார் டாக்ஸி சங்க பொருளாளர் ஐயப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் தோழர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.