• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மதுரையில் ஆட்டோ நிறுத்தி ஆள் ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்சனை.., ஆட்டோ ஓட்டுநர் கல்லால் அடித்து கொலை…

ByKalamegam Viswanathan

Nov 6, 2023

மதுரை நேதாஜிசாலை பகுதியில் ஆட்டோவை நிறுத்தி ஆள் ஏற்றிச் செல்வதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர்கள் இண்டு பேருக்கிடையே தகராறு ஏற்பட்டது.அதனை தொடர்ந்து நேற்று இரவு ஆட்டோ ஓட்டுனர்களான நாகராஜ் மற்றும் அவரது நண்பர் சூரிய பிரகாஷ் ஆகியோர் ஆட்டோ ஓட்டுனர் மணிகண்டனை செங்கலால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலயே பரிதாபதாக உயிரிழந்தார்.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திலகர்திடல் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து உயிரிழந்த மணிகண்டனின் மனைவி மீனா(38) அளித்த புகாரின் கீழ் திலகர்திடல் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து மதுரை மாநகர் எம் கே புரத்தைச் சேர்ந்த நாகராஜ் (28)மற்றும் சம்மட்டிபுரம் பகுதியை சேர்ந்த சூரிய பிரகாஷ் (24) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.