• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மதுரையில் தமிழ்நாடு குறவர்கள் பேரவை சார்பில், ஆட்சியரிடம் மனு…

ByN.Ravi

Sep 23, 2024

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் தினத்தன்று தமிழ்நாடு குறவர்கள் பேரவை சார்பில் ரூ.5 லட்சம் கடன் உதவி வழங்க மனு கொடுக்க வந்தனர் .
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: நாங்கள் இந்து குறவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் எங்களுடைய பரம்பரை தொழிலாக கிளி ஜோசியம் பார்ப்பது என்று இருந்த நிலையில் தற்போது, வனத்துறையினர் வனத்துறை விலங்குகள் சட்ட பாதுகாப்பு படி நாங்கள் வைத்திருந்த கிளிகளை பறிமுதல் செய்து சென்று விட்டனர். இதனால், எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. நாங்கள் மதுரை மாவட்டத்தில் 20 குடும்பங்கள் உள்ளோம் எங்களில் ஒருவருக்கு மாற்றுத் தொழில் செய்ய தாட்கோ மூலமாக ரூ. 5லட்சம் மானியத்துடன் வழங்க வேண்டும் என, கோரி தலைவர் செல்வராஜ் தலைமையில் மனு கொடுக்க வந்தனர்.