தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வீட்டு வசதி மற்றும் நகரப்புர வளர்ச்சித்துறை தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மதுரை மாவட்டம் அரசு அலுவலர்களுக்கு 224 அடுக்குமாடி வாடகை குடியிருப்புகள் மற்றும் மஞ்சள்மேடு பகுதியில் 320 அடுக்குமாடி குடியிருப்புகளை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்கள்,
அதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, குடியிருப்புக்கான ஆணைகளை பயனாளி
களுக்கு வழங்கினார். மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.