• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குமரி மாவட்டத்தில்

நாம் தமிழர் வேட்பாளார்கள்….

சீமான் போடும் ஸ்கெட்ச்!

தமிழகத்தில் காங்கிரஸ் சார்பான  மாவட்டமாகவே  குமரி இருக்கிறது  என்பதை. குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த 1956 நவம்பர் 1   முதல்,நடந்து முடிந்த சட்டமன்ற,  நாடாளுமன்ற தேர்தல் வரை குமரி வாக்காளர்களின் தீர்ப்பு மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது.

அந்த காலகட்டத்தில் குமரி முழுவதும் எதிரொலித்தது ‘அப்பச்சி காமராஜ்”

என்ற ஒற்றை கோசம் இன்றும் குமரியில் அடக்கவே முடியாத ஓங்கார ஓசையாக அது ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இம்மாவட்டத்துக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதியான கிள்ளியூர்  தொகுதியில் இடைவெளியே இன்றி காங்கிரஸ் வெற்றி பெறும் தொகுதி. இப்போது காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் ராஜேஷ்குமாரின் தொகுதி இது.

சீமான் கட்சி தொடங்கிய நாள் முதல் தனித்தே போட்டியிடும் நிலையில் இந்த கிள்ளியூர்  தொகுதிக்கு நாம் தமிழர் வேட்பாளராக  நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக ஹிம்லரை சீமான் அறிவித்துள்ளளார்.

இதே போல் அதிமுக வெற்றி பெற்ற கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளராக. கடந்த கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட மரிய ஜெனிபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி மீனவர்கள் நிறைந்த ஒரு தொகுதி. கன்னியாகுமரியை சேர்ந்த மீனவ பெண் மரிய ஜெனிபர் அறிவிக்கப்பட்டுள்ளதை குமரியின் ஒட்டுமொத்த மீனவ சமுதாயமும் வரவேற்றுள்ளனர்.

குமரியில் மீனவர்களுக்கு என்று ஒரு தனித்த தொகுதி வேண்டும் என்ற நீண்ட கோரிக்கையின் ஒரு வடிவமாக இதை  மீனவ சமுதாயமும் எண்ணத் தொடங்கிவிட்டது.

கன்னியாகுமரி தொகுதியின் கடந்த காலத்தைப் பார்த்தால் பிள்ளைமார்  சமூகத்தினரின் தொகுதி என்பதுதான் நீண்ட கால வரலாறு.

 இதை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் உடைத்தார். பச்சைமாலை கன்னியாகுமரியில்

நிறுத்தி, பிள்ளைமார் அல்லாத மற்றொரு சமுதாயத்தினரை முதல் வெற்றியை பெற வைத்தார் ஜெயலலிதா.

 தளவாய் சுந்தரம் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் என்பதோடு எதிர் வரும் 2026  தேர்தலிலும் தளவாய் சுந்தரமே போட்டியிடும் நிலையில், பாஜகவின் கூட்டணி என்பது,  தமிழகத்திலே அதிமுகவுக்கு கை கொடுக்கும் ஒற்றை தொகுதி கன்னியாகுமரி.

இந்த பின்னனியில் கன்னியாகுமரியில் மீனவர் வாக்குகளைக் குறிவைத்து மரியஜெனிபரை இறக்கியுள்ளார் சீமான்.

நாம் தமிழர் இதுவரை பெற்றுள்ள 8 சதவீதத்தை 2026 தேர்தல் முடிவு சற்றே அதிகரிக்கும் என்பதே, தமிழக  அரசியல் களத்தின் இன்றைய உண்மை நிலவரம்.

குமரியில் சீமானின் இந்த வேட்பாளர்கள் இப்போதே களமாடத் தொடங்கிவிட்டனர்.