• Sat. May 11th, 2024

குமரியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்..!

குமரி மாவட்டத்தில், பதம்மநாபபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வரும் நிலையில், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வாகனங்களைக் கழுவிச் செல்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கும் பொருட்டு, சுமார் 232 கோடியில் பணிகள் தொடங்கின. அப்பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவற்றது. ஆனால் இதுவரை குடிநீர் வடிகால் வாரியம் ஏற்று எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே குடிநீர் குழாய்கள் மற்றும் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள வால்வுகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள கான்கிரீட் ஸ்லாப்புகளும் ஆங்காங்கே உடைந்து சாலைகள் பெருத்த சேதம் ஏற்படுவதும் சாலைகள் புதைவதும் வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது புதிதாக குழிக்கோடு அருகே வாழ்வச்சகோஷ்டம் “பி” கிராம அலுவலகத்தின் முன் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. அந்த குடிநீர் சாலையிலும் பீறிட்டு பாய்ந்து வருகிறது. அப்பகுதியில் செல்லும் கார்கள் பீறிட்டு வரும் குடிநீரில் தங்கள் காரை கழுவி செல்லும் காட்சிகளையும் காண முடிந்தது. சாலையில் செல்லும் வாகனங்கள் பீறிட்டு தண்ணீர் வரும் சாலை ஓரத்தில் சுமார் ஐந்து நிமிடங்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி, வாகனங்களை கழுவி செல்வது, இலவச மொபைல் கார் வாட்டர் சர்வீஸ் சென்டர் போன்று உள்ளதாக வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்தனர்.
பல்வேறு பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் பணிகள் முடிந்து சில மாதங்களே ஆன பத்மநாபபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தரமானதாக அமைத்திருந்தால் இதுபோன்ற குழாய் உடைவது போன்ற நிகழ்வுகள் தடுக்கப்பட்டிருக்கும் என்பதுடன் பைப் உடைந்ததை உடனடியாக சீர் செய்து வீணாகும் குடிநீரை பாதுகாக்க அந்த பகுதியில் உள்ள பொது மக்களின் வேண்டு கோளாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *