• Wed. Jun 18th, 2025
[smartslider3 slider="7"]

ஜூலையில் தமிழ் புதல்வன் திட்டம் தொடக்கம்

Byவிஷா

May 8, 2024

அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம், தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2023 – 2024ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், புதுமைப் பெண் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டதைப் போல, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்க தமிழ்ப் புதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்கள் பாடப்புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் 1000 ரூபாய் அவர்களின் வங்கிக் கடனில் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இத்திட்டத்தை நிறைவேற்றிடும் வகையில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.