• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஜப்பானில் – ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ByA.Tamilselvan

Mar 29, 2023

ஜப்பானில் நிலநடுக்கம் நேற்று மாலை 6.18 மணிக்கு 20 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. கடும் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. ஆசிய கண்டத்தில் தீவு நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள அமோரியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நேற்று மாலை 6.18 மணிக்கு 20 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பான் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. எனினும், இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.