• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்..,ஜூன் 22 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆரம்பம்..!

Byவிஷா

May 23, 2023

வருகிற ஜூன் 22ஆம் தேதி முதல், தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆரம்பாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூன் 22ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கலை கல்லூரிகளில் சேர இதுவரை மூன்று லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் 54 ஆயிரத்து 638 பேர் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர்.
இதில் சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு மே 29ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. பொது கலந்தாய்வு ஜூன் 1 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் 22 ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.