• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கோவையில் மற்ற கட்சிகளுக்கு தாவும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்

Byவிஷா

Dec 25, 2023

அமைச்சர்களையே திமுகவால் காப்பாற்ற முடியவில்லை, இதில் தொண்டர்களை எப்படி காப்பாற்றுவார்கள் என்று கோவையில் உள்ள செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் அதிமுக மற்றும் பாஜகவில் இணைந்து வருவது திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அதிமுகவின் கோட்டையாக இருந்த கோவை மாவட்டம், செந்தில்பாலாஜி பொறுப்புக்கு வந்த பின்னர், திமுகவின் கோட்டையாக மாறி விட்டது எனக் கூறப்பட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட, கோவை மாவட்டத்தில் செந்தில்பாலாஜியின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், செந்தில்பாலாஜி சிறைக்குச் சென்றதால், அவருடைய ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. நம் அமைச்சரையே திமுகவால் காப்பாற்ற முடியவில்லை, இதில் தொண்டர்களை எப்படிக் காப்பாற்றுவார்கள் என புலம்பி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களாக இருந்த முக்கியப் புள்ளிகளில் சிலர் பாஜக.விலும், ஒரு சிலர் அதிமுக.விலும் இணைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தத் தகவல் திமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.