• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

போலி சிம் கார்டு வாங்குபவர்களுக்கு சிறைத்தண்டனை..!

Byவிஷா

Dec 22, 2023
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தொலைத்தொடர்பு மசோதாவில், போலி சிம்கார்டு வாங்குபவர்களுக்கு, 3 ஆண்டு சிறைத்தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் உணவு இன்றி கூட வாழ்ந்து விடுவார்கள் ஆனால் போன் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலையில் உள்ளனர். இந்நிலையில் மொபைல்களில் பல வகையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதே போல் மொபைலில் நாம் பயன்படுத்தும் சிம்கார்டுகளிலும் பல விதமான மாற்றம்கள் ஏற்பட்டுள்ளது. பல வகையான சிம்கள் மார்கெட்டில் அறிமுகமாகியுள்ளது.
இந்நிலையில் தான் பல விதமான இணையவழி மோசடி செயல்கள் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு சார்பில் மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது புதிய தொலைத்தொடர்பு மசோதா டிசம்பர் 20-ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவானது தற்போது இறுதிகட்ட ஆய்வுக்காக ராஜ்யசபாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில் எந்த ஒரு தொலைத்தொடர்பு சேவை அல்லது நெட்வொர்க்கையும் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கம் கையகப்படுத்தவோ அல்லது இடைநிறுத்தவோ முடியும். அதுமட்டுமின்றி போலி சிம் கார்டு வாங்குபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.