• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

கோவில் திருவிழாக்களில் யானையின் முக்கியஸ்தம்

இன்றைய குமரி மாவட்டம் பகுதிகள் முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த பகுதி. திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் கோவில் விழாக்களில் யானைக்கு முக்கிய பங்கு உண்டு.

கேரள அரசின் அடையிளமே இரண்டு யானைகளுக்கு மத்தியில் சங்கு இருப்பது பேன்றதே கேரள அரசின் அடையாளம். குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த போது அன்றைய தேவஸ்தானத்திற்கு 5 யானைகள் சொந்தமாக இருந்தது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழக கோவில் திருவிழாக்களில் யானையை பயன் படுத்த வனத்துறை தடை விதித்ததை ஏற்று கொண்டு தமிழக அரசு செயல் படும் நிலையில், நவராத்திரி காலத்தில் குமரி அம்மன் 10 _நாட்கள் தவம் இருந்து கன்னியாகுமரிக்கு சற்று தொலைவில் உள்ள மகாதானபுரத்தில் பரிவேட்டைக்கு செல்லும் அய்தீகம. திருவிதாங்கூர் மன்னர் காலம் தொட்டு மக்கள் ஆட்சியின் இன்றைய காலத்திலும் தொடர்கிறது. இந்த விழாவில் யானையை பன்னெடும் காலம் பயன் படுத்தி வந்தது வழக்கம்.வனத்துறையின் புதிய ஆணையால் தடைபட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலைக்கு இந்து மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு வெளிவந்துக்கொண்டிருந்த நிலையில், இந்த ஆண்டு நவராத்திரி விழாவின் தொடக்க நாள் முதலே புனித நீர் எடுத்து வர யானை வேண்டும் என்ற கோரிக்கையை கன்னியாகுமரியை சுற்றிய 42_கிரமத்து மக்களும் கோரிக்கை வைத்து. கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில் பெரும் திறள் கண்டனம் கூட்டம் நடத்திய நிலையில், குமரி மாவட்டம் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் இடம் கேட்டபோது, கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் 490  திருக்கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் பாரம்பரிய முறைப்படி விழாக்கள் நடத்த 1956-ல் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த போது ஐந்து யானைகள் வாங்கப்பட்டது. இந்த யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக நோயால் இறந்தன. கடைசியாக சில ஆண்டுகளுக்கு முன்னர் குழித்துறை கோபாலன் யானையும் இறந்தது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் யானைகள் வாடகைக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து விதிகளுக்கு உட்பட்டு கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தி வந்தனர்.


யானையின் உரிமையாளர்கள் முறையான லைசன்ஸ் பெறாமலும், பருவ கால தடுப்பூசிகள் போடாமல் யானைகள் பயன்படுத்துவதாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், வனத்துறை கடும் கட்டுப்பாடு விதித்தது. இது தவிர திருவிழா நேரங்களில் யானைகளால் ஏற்படும் விபத்துக்கள், நீதிமன்றகளில் உள்ள பொது நல வழக்குகள் யானைகள் பயன் படுத்துவதில், திருவிழா காலங்களில் சிக்கல் எழுந்தது. வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து யானை கொண்டு வருவது பெரும் பொருட் செலவாகும். இந்நிலை யில் பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி பரிவேட்டை திருவிழா நடந்து வருகிறது.  பாரம்பரிய முறைப்படி திருவிழா லில் யானை பயன் படுத்துவது வழக்கம்.
ஆனால், பல தரப்பு பிரச்னை காரணமாக யானை வருவதில் சிக்கல் இருந்து வருகிறது. இதற்கிடையில், குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகம் முயற்சியில் வெளி மாவட்டத்தில் இருந்து கோயில் யானை கொண்டு வர முயற்சி எடுத்து வருகின்றோம்.
குமரி மாவட்டத்திற்கு தனியாக ஓர் யானை வேண்டும் என ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களிடம்  நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளேன். மேலும் துறை ரீதியாகவும் முயற்சிகள் மேற்கொண்டு உள்ளோம். குமரி பகவதி அம்மன் கோயில் நவராத்திரி திருவிழாவிற்கு, யானை பயன்படுத்துவது வழக்கம். மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களிடம் உத்தரவு பெற்று தமிழகத்தில் உள்ள கோயில்களில் உள்ள யானைகளில் ஏதேனும் ஒன்றினை தற்சமயத்திற்கு பயன்படுத்த முயற்சி எடுத்துள்ளோம் இதற்கு அனுமதி பெற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மேலாளர் ஆனந்த் தலைமையில் அதிகாரிகள் சென்னை தலைமை ஆணையர் அலுவலகத்தில் உத்தரவு ஆணையும், வனத்துறையிடம் அனுமதி பெறவும் முயற்சித்து வருகின்றனர். இன்று அல்லது நாளைக்குள் அனுமதி கிடைக்கும். உடல் தகுதியின் அடிப்படையில் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணசாமி கோவிலில் உள்ள கோமதி பெண் யானை வரவழைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றோம் என அரசியல் டுடே விடம்
தெரிவித்தார்.