• Mon. Jun 24th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Jun 16, 2024

நற்றிணைப்பாடல்: 381

‘அருந் துயர் உழத்தலின் உண்மை சான்ம்’ எனப்
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்;
கரை பொருது இழிதரும் கான் யாற்று இகுகரை
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல,
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை யாங்கனம் தாங்குவென் மற்றே? – ஓங்கு செலல்
கடும் பகட்டு யானை நெடு மான் அஞ்சி,
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க,
தேர் வீசு இருக்கை போல,
மாரி இரீஇ மான்றன்றால் மழையே

பாடியவர்: அவ்வையார் திணை: முல்லை

பொருள்:

தலையெடுத்து நடக்கும் உயர்ந்த விரைந்த நடையையுடைய களிற்றியானைப் படையும் விரைந்து செல்லும் குதிரைப் படையுமுடைய அஞ்சியென்பான் குளிர்ந்த உள்ளத்தால் ஆராய்ந்து நீண்டகாலம் தன்பெயர் விளங்கி நிற்குமாறு இரவலர்க்குத் தேர்களைப் பரிசு கொடுக்க இருக்கின்ற நாளோலக்கம் போல; மேகம் மழை பெய்யத் தொடங்கி மாறாது ஒரு தன்மையாய்ப் பெய்யாநின்றது; என் காதலர் வருவேமென்ற இப்பருவத்தில் அவர் வாராமையாலே தாங்குதற்கரிய துன்பத்தை நுகர்தலின் அறிகுறியாக இதுகாறும் யான் இறந்தொழியின் அவர்பால் அன்புடையேன் என்பது உண்மையாகும்; அவ்வாறு இறந்தொழியாமையின் அன்பிலேன் அல்லேனோ? அவ்வண்ணம் அன்பில்லாதேனை அவர் அருளாராயினும் கரையை மோதியோடுகின்ற கான்யாற்றின் இடிகரையில் வேர்களெல்லாம் அலசப்பட்டுத் தோன்றிக் காற்றாலலையும் மாமரத்தின் அழகிய தளிர்போல; நடுங்குதல் நீங்காத நெஞ்சுடனே இத்துன்பத்தை எவ்வாறு தாங்கவல்லேன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *