• Mon. Jan 26th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Oct 21, 2023

நற்றிணைப் பாடல் 278:

படு காழ் நாறிய பராஅரைப் புன்னை,
அடு மரல் மொக்குளின், அரும்பு வாய் அவிழ,
பொன்னின் அன்ன தாது படு பல் மலர்
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும்
நெய் கனி பசுங் காய் தூங்கும் துறைவனை இனி, அறிந்திசினே கொண்கன் ஆகுதல்
கழிச் சேறு ஆடிய கணைக் கால் அத்திரி
குளம்பினும் சேயிறா ஒடுங்கின;
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே.

பாடியவர் : உலோச்சனார்
திணை : நெய்தல்

பொருள் :

அடுத்த மரலின் மொக்குகளைப்போலப் பொருந்திய வயிரம் விளங்கிய பருத்த அடியையுடைய புன்னையரும்புவாய் திறந்து மலராநிற்ப அங்ஙனம் மலர்ந்த பொன் போன்ற மகரந்தமிக்க பலவாகிய மலர்களில்; அணிந்து கொள்பவர் கொய்து தொடுத்தனபோக எஞ்சியன; கிளைகடோறும் நெய்மிக்க பசிய காயாகத் தூங்காநிற்கும்; கடற்றுறையுடைய தலைவனை; கழிக்கரையிலுள்ள சேறுபட்ட திரண்ட காலையுடைய அவனது தேரிலே பூட்டிய கோவேறு கழுதையின் குளம்பினெங்கும் சிவந்த இறாமீன்கள் ஒடுங்கப்பட்டு அழிந்தன; அவனது மாலையிலும் மற்றெவற்றினும் காற்றால் எறியப்படும் வெளிய மணல் ஒடுங்கின; ஆதலின் நினக்கே கணவனாமாறு விரைவில் வந்தனன் போலுமென்று இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன்.