• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

குறுந்தொகைப் பாடல் 20:

Byவிஷா

Feb 7, 2025

அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.

பாடியவர்: கோப்பெருஞ்சோழன்
திணை: பாலை

பாடலின் பின்னணி:
பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தன் காதலனைப் பிரிந்திருக்கும் தலைவியைக் காண அவள் தோழி வருகிறாள். தலைவன் பிரிந்து சென்றது அறிவுடைய செயல் அன்று என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்
பாடலின் பொருள்:
தோழி!, அருளையும் அன்பையும் துறந்து, தம் துணைவியைப் பிரிந்து, பொருள் தேடும் பொருட்டு, சென்ற நம் தலைவர், அறிவுடையவராயின், அந்த ஆற்றலை உடைய அவர் அறிவுடையவராகவே இருக்கட்டும். அவரைப் பிரிந்திருத்தற்குரிய ஆற்றல் இல்லாத நாம், அறிவில்லாதவர்களாகவே இருப்போம்.