• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

ஆங்கிலம் தெரிந்தால் உலகம் சுற்றி வரலாம்! MP திருமாவளவன் பேட்டி …

ByPrabhu Sekar

Mar 6, 2025

நாடாளுமன்ற தேர்தலுக்கான மறு சீரமைப்பு காலக்கடு முடிந்து விட்டது மத்திய அரசு முடிவெடுத்தாக வேண்டும். பாஜக அதிமுகவை தனியாக தேர்தலை சந்திக்க அனுமதிக்க மாட்டார்கள். கூட்டணி அமைத்தே ஆக வேண்டும் என நெருக்கடி கொடுப்பார்கள். ஏதோ ஹிந்தி படித்து விட்டால் அனைவருக்கும் வேலை கிடைத்துவிடும் என்பது போல் பேசுகிறார்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு மூன்றாவது மொழி கிடைக்கவில்லை என்றால் என்ன பாதிப்பு ஏற்பட்டு விடப் போகிறது.

பல்லாவரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி:-

சென்னை பல்லாவரம் பகுதியில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய திருமாவளவன்..,

நாடாளுமன்ற தேர்தலுக்கான மறு சீரமைப்பு குறித்து மத்திய அரசு தேர்தல் ஆணையமோ ஏதோ தெரிவிக்கவில்லை ஆனால் மக்களை பயமுறுத்துவதற்காக இது போன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதாகவும் அதில் கலந்துகொண்ட 45 கட்சிகளுக்கும் பயம் குறித்து கடிதம் அனுப்பப் போவதாக அண்ணாமலை கூறியது குறித்து கேட்டபோது …

நாடாளுமன்ற தேர்தலுக்கான மறு சீரமைப்பு நடத்த வேண்டிய காலக்கெடு முடிந்ததா இல்லையா இதற்கு அண்ணாமலை பதில் கூற வேண்டும் வரும் 2026 ம் வருடத்தோடு காலக்கடு முடிந்து விட்டது அதன் பிறகு மத்திய அரசு ஏதேனும் ஒரு முடிவை எடுத்தாக வேண்டும் மறு வரையறை செய்யப் போகிறோம் அல்லது வரும் 25.. 30 ஆண்டுகளுக்கு இதை தள்ளி போட போகிறோம் என சொல்லியாக வேண்டும்

மறு வரையறை காண காலம் நெருங்கி விட்டதால் தான் ஊடகங்களிலும் பொதுவெளிகளிலும் இது பற்றி பேசி வருகிறார்கள் இது தமிழ்நாட்டில் மட்டும் அல்ல திமுக மட்டும் பேசவில்லை பலரும் பேசி வருகிறார்கள் 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பின் நாடாளுமன்ற தேர்தல் வரையறை நடைபெற்றது அதன் பிறகு மிசா வந்ததன் காரணமாக 25 வருடங்களுக்கு தள்ளிப் போடப்பட்டது அதன் பிறகு வாஜ்பாய் ஆட்சி காலத்தில்
மறு வரையறை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட பொழுது அப்போது இருந்த வாஜ்பாய் அரசு மேலும் 25 வருடத்திற்கு தள்ளிப் போட்டது அந்த கால கெடு 2026 ஆம் ஆண்டு முடிவடைகிறது அதனால் மறு வரையறை செய்தாக வேண்டும் என்பது ஒரு கட்டாயம்

செய்யலாமா வேண்டாமா என்பதை ஒன்றிய அரசு முடிவு எடுக்க வேண்டும் என்பது தனி ஆனால் கால கெடு முடிவடைந்தது விட்டது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் அரசியல் வல்லுநர்கள் இதைப் பற்றி பேசி வருகிறார்கள்

மோடி உள்ளிட்ட பலரும் இதைப் பற்றி பேசி இருக்கிறார்கள்
அதன் அடிப்படையில் தான் தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு எச்சரிக்கையை ஒன்றிய அரசுக்கு தரும் வகையில் கூட்டினாரே தவிர இது மக்களை பயமுறுத்துவதற்கான செயல் அல்ல அண்ணாமலை தான் வேண்டுமென்றே மக்களை திசை திருப்புகிறார் விவாதம் செய்கிறார்கள்.

அதிமுக பாஜக கூட்டணி குறித்து கேட்டபோது..,

பலமுறை கூறியிருக்கிறேன் பாஜக அதிமுக கூட்டணி தான் அமைய வாய்ப்பு இருக்கிறது அதற்கான காய்களை அவர்கள் நகர்த்தி வருகிறார்கள் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக தலைவர்கள் அடிக்கடி கூறி வந்தாலும் பாஜக அவர்களை தனியாக தேர்தலை சந்திக்க அனுமதிக்காது அவர்களுக்கு அரசியல் நெருக்கடியை கொடுப்பார்கள் அழுத்தத்தின் அடிப்படையில் கூட்டணியை அமைப்பார்கள் இதுதான் நடக்கப் போகிற எதார்த்தமான உண்மை…

ஹிந்தி மொழியை யாரும் வெறுக்கவில்லை இந்திக்கு எதிரான வெறுப்பு அரசியலை திணிக்கவில்லை முதலில் இந்த புரிதல் வேண்டும் அரசாங்கமே இந்திய கட்டாய மொழியாக ஒரு கொள்கையாக வரையறுத்து அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என மாநிலங்களுக்கு கட்டளையிடும் பொழுது அரசு இப்படி ஒரு கொள்கையை திணிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கிறோம்

எல்லா மாநிலங்களிலும் ஹிந்தி பிரச்சார சபா இருக்கிறது தமிழ்நாட்டிலும் இருக்கிறது திரும்பி படிக்கும் நபர்கள் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்களை யாரும் தடுக்க வில்லை

ஆனால் அதற்கு ஒரு கொள்கை வரையறுத்து 20, 30 வருடங்களுக்குப் பின்னால் தமிழ்நாட்டில் அனைவரும் ஹிந்தி படிக்கும் அளவிற்கு மாறிவிட வேண்டும் இந்தியா முழுவதும் ஹிந்தி பேசும் நபர்களே இருக்கிறார்கள் என உருவாக வேண்டும் மெல்ல மெல்ல அவர்களின் தாய் கரைந்து காணாமல் போக வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு முன்மொழிக் கொள்கையை திணிக்கிறார்கள் என்பது தான் எங்களுடைய குற்றச்சாட்டு..

அவர்களால் மறக்க முடியவில்லை ஏதோ ஹிந்து படித்து விட்டால் எல்லா மாணவர்களுக்கும் வேலை கிடைத்து விடும் என்பது போல் ஏழை பிள்ளைகள் எல்லாம் ஹிந்தி படிக்காவிட்டால் பாதிக்கப்பட்டு விடுவார்கள் என்று ஏழைகளுக்கு இறக்கம் காட்டுவது போல் நாடகமாடுபவர்கள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் நாம் அவரவர் தாய்மொழியை அவரவர் கற்றுக் கொள்ளட்டும் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கட்டும் ஹிந்தி வேண்டாம் ஹிந்தி ஒரு இணைப்பு மொழியாக இருக்க முடியாது ஆங்கிலம் தான் இருக்க முடியும் என்பது தான் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது அதைத்தான் திமுக உட்பட்ட பல கட்சிகளும் இங்கு முன்வைக்கின்றன

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் மூன்றாவது மொழி மறக்கப்படுகிறது என பாஜகவினர் குற்றச்சாட்டுவது குறித்து கேட்ட பொழுது..,

இது ஒரு கற்பனையான குற்றச்சாட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு அப்படியே கிடைக்கவில்லை என்றால் என்ன பெரிய பாதிப்பு ஏற்பட்டு விடப்போகிறது அதேபோன்று பணக்கார வீட்டுப் பிள்ளைகள் படித்து விடுவதால் என்ன பெரிய பயன் அடையப் போகிறார்கள் இரண்டுமே அதீதமான கற்பனை ஹிந்தி கற்றுக் கொள்வதினால் பயனதும் இல்லை ஹிந்தி கற்காமல் இருப்பதினால் பாதிப்பு எதுவும் இல்லை..

ஆங்கிலம் கற்று கொள்வதனால் உலகம் முழுவதும் செல்ல முடியும் அது மட்டும் தான் இணைப்பு மொழியாக இருக்க முடியும் என கூறினார்.