• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கடன் வாங்கியவர்களை துன்புறுத்தினால்…
ரிசர்வ் வங்கி எச்சரிக்கை…

Byகாயத்ரி

Jun 18, 2022

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கியவர்களிடம் இருந்து கடனை வசூலிப்பதற்கு ஏஜென்ட்டுகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடன் வாங்கியவர்களை துன்புறுத்தும் விதமாக கடன் வசூலிப்பதற்காக கடுமையாக நடந்து கொள்ளும் ஏஜெண்டுகளுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நள்ளிரவில் கூட ஏஜெண்டுகள் அழைப்பு விடுத்து வாடிக்கையாளர்களை துன்புறுத்துவதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது.

மேலும் ஏஜெண்டுகள் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்திக் திட்டுவதாக புகார் வருகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் நிதி நிறுவனங்கள் மரியாதைக்கு ஆபத்து ஏற்படும். இதுமாதிரியான புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால் பெரும்பாலான ஒழுங்கு படுத்தப்படாத நிறுவனங்கள் மீது புகார்கள் வருகிறது. இதுபோன்ற புகார்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.