• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தம்பி வரவில்லை என்றால் அண்ணன்கள் வந்திருக்கிறோம் -சீமான்..,

ByPrabhu Sekar

Sep 30, 2025

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின்னர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையம் வந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்,

உயிரிழந்தவர்களை உடற்கூறாய்வு முடித்து உறவினர்களிடம் கொடுத்து அனுப்பினார்கள். ஒரு 4 பேர் உடல் வரை இருந்தது, காயம்பட்டவர்களை பார்த்தோம். பெரியளவு முகத்தில் காயம் இல்லை ஒரு சிலருக்கு விழுந்ததில் கை கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது மருத்துவமனையில் குணமடைந்து வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி உயிரிழப்புக்கு வராத முதல்வர் கரூர் பிரச்சனைக்கு வருவது குறித்த கேள்வி,

இது யார் காரணமோ அவர்களிடம் கேட்க வேண்டும் என்னிடம் கேட்டு என்ன செய்வது. அது அவர்கள் ஆட்சியில் நடந்தது பொறுப்பேற்க வேண்டியது அவர்கள்தான் இது தம்பி விஜய் கூட்டத்தில் நடந்தது. திமுகவினரை எதிர்க்கிறார் அவர் கூட்டத்தில் நடந்ததால் இவர்கள் வந்திருக்கிறார்கள் இது எதார்த்தம் தானே.

மின்கம்பங்களில் பலர் ஏறி இருக்கிறார்கள் அதனால் அவர்கள் கட்சியினர் கேட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் சொல்கிறார். காலை உணவு உண்ணாமல் எட்டு மணியில் இருந்து மதிய உணவும் உண்ணாமல் தண்ணீர் கூட இல்லாமல் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் நகர்ந்து கூட செல்ல முடியாத இடத்தில் நின்று இருக்கிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் பிரச்சாரம் செய்த இடத்தில் தான் இடம் கொடுத்தோம் என்று சொல்கிறார்கள், அதேபோல் அவர்கள் சொன்ன நேரத்தில் வரவில்லை கூட்டம் அதிகரித்து விட்டது என்று சொல்கிறார்கள். தமிழக வெற்றி கழகம் சார்பில் வேறு இடம் கேட்டும் அவர்கள் அந்த இடம் கொடுக்கவில்லை என்கிறார்கள். எதுவாக இருந்தாலும் நடப்பது நடந்து விட்டது இழப்பு இழப்புதான் இனி வரும் காலங்களில் இது போல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் நடந்து முடிந்ததை பேசிப் பேசிக் கொண்டிருந்தால் எப்படி இருந்தாலும் வலியாகத்தான் இருக்கும்.

விஜய் தற்போது வரை கரூர் செல்லாமல் இருப்பது குறித்த கேள்விக்கு,

அந்த நேரத்தில் அவர் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று சிந்திக்க வேண்டும். என்ன செய்வது என்று தெரியாத தடுமாற்றம் இருந்திருக்கலாம். அவர் வரவில்லை என்றால் என்ன நாங்கள் எல்லாம் வந்திருக்கிறோம் தம்பி வரவில்லை என்றால் அண்ணன்கள் வந்திருக்கிறோம்.

கூட்டத்தில் மயங்கி விழுந்தவர்களை கொண்டு செல்ல தான் ஆம்புலன்ஸ் வந்ததாக சொல்கிறார்கள் எப்படி பார்த்தாலும் இழப்புதான் தெரிகிறது அதில் எதுவும் பேச முடியாது.

இந்த நிகழ்வில் திமுக அரசியல் செய்துள்ளதா என்ற கேள்விக்கு,

இங்கு எல்லாமே அரசியல் தான். ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு வார்த்தையிலும் அரசியல் கிடைக்கிறது என்கிறார்கள் எல்லாமே அரசியல் தான்.

ஆளும் கட்சிகள் அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள் யாருக்கும் பிரச்சார கூட்டத்தில் பிரச்சினைகள் வருவதில்லை. நீண்டகாலமாக நாங்கள் கேட்கும் எந்த இடத்திற்கும் அனுமதி கிடைப்பதில்லை அவர்கள் குறுகலான ஒரு இடத்தில் கொடுப்பார்கள் அவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியாது. நீதிமன்றத்திற்கு சென்றாலும் காவல்துறை சொல்வதைக் கேளுங்கள் நாளை பிரச்சனை என்றால் அவர்கள் தான் வரவேண்டும் என்பார்கள். விஜய் புதிதாக இருப்பதால் அவருக்கு அப்படி தெரிகிறது எங்களுக்கு பழகிவிட்டது.

பாதிக்கப்பட்டவர்களை கரூருக்கு சென்று விஜய் தற்போது வரை பார்க்காமல் இருப்பது பற்றிய கேள்விக்கு,

திரும்பத் திரும்ப சொல்கிறேன் இது எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தை யாரும் விரும்பி செய்வதில்லை மக்களை கூட்டி வைத்துக் கொல்ல வேண்டும் என்று செய்வதில்லை. நியாயமாக பார்த்தல் நாம் வலியோடு பேசிக் கொண்டிருக்கிறோம் இதைவிட இரண்டு மடங்கு காயம் விஜய்க்கு இருக்கும் என்ன நம்மளால் இப்படி ஆகிவிட்டதே என்று, இதைப் பற்றி பேசி அவர்களை காயப்படுத்தக் கூடாது.

விஜய்க்கு அறிவுரை சொல்வதாக இருந்தால் என்ன சொல்வீர்கள் என்ற கேள்விக்கு,

ஒரு இடத்தை வாங்கி சின்ன சின்ன பொதுக் கூட்டம் போல் வைக்கலாம். குறுகலான தெருக்களில் கூட்டத்தை சேர்த்தால் சரியாக வராது. நாற்காலி போட்டால் அவர்கள் உட்கார்ந்து விடுவார்கள் அதிக நேரம் நிற்க வேண்டியிருக்காது.

நாங்கள் போடும் கூட்டத்தில் அவர்களை உட்கார வைத்தோம் ஒரு சந்துக்குள் நிற்க வைத்தால் நெரிசலாக தான் இருக்கும். இனிவரும் காலங்களில் சிறிய சிறிய கூட்டங்களாக மாற்றிக்கொண்டால் பாதுகாப்பாக இருக்கும்.

ஒரு நபர் ஆணையம் பயன் தராது. எது போல அந்த அறிக்கை வரும் என்று நினைக்கிறீர்கள்?. ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் அறிக்கை என்ன ஆனது. அதற்கு நடவடிக்கை என்ன? அது பிரச்சினையை நகர்த்தும் செயல்

அரசு எடுத்த நடவடிக்கை சரியானதுதான்.

பார்க்க வரும் கூட்டத்திற்கு பக்குவம் இல்லை என்ற விமர்சனத்திற்கு பதில் அளித்தவர்,

முதல் காட்சி பார்க்கும் ஆர்வம் போல் வரும் ரசிகர்கள் மனநிலை. இதில் நிறைய எதிர்பார்க்க முடியாது. அவர் பேசும்போது கத்திக்கொண்டு தான் இருப்பார்கள் என்ன பேசுகிறார் என்பது கூட கேட்பதில்லை.

விஜயை ஓரிரு முறை நேரில் பார்த்துவிட்டால் பயன்பாடு தான் முதல் மாம்பழம் சாப்பிடும்போது இருந்த சுவை 5 ஆவது மாம்பழம் சாப்பிடும் போது இருக்காது அதை மாம்பழம் தான் அதுபோல்தான் இதுவும். இரண்டு மூன்று முறை பார்த்து விட்டால் ஆர்வம் குறைந்து விடும்.

விஜயை நேரில் சந்தித்து இந்த சம்பவம் தொடர்பாக ஆறுதல் தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு,

தேவைப்பட்டால் சந்தித்து ஆறுதல் சொல்லலாம். நாங்கள் சந்தித்தவர்கள் தானே இப்போது அவர் ஒரு புறம் பயணம் செல்கிறார் நாங்கள் ஒரு புறம் பயணம் செல்கிறோம்.