• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மருதுபாண்டியர் சிலை அமைக்காவிட்டால் உண்ணாவிரத போராட்டம்!

Byகுமார்

Mar 25, 2022

சிவகங்கை மாமன்னர் மருதுபாண்டியர் சிலை நிறுவக் கோரியும் தமிழக சட்டமன்ற பொறுப்பற்ற பதில் அளித்த செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனைக் கண்டித்து தமிழ்நாடு வீரத் தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரையில் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் அன்பு மணிகண்டன் தமிழ்சூரியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அகமுடையர் கல்வி மையம், தமிழ்நாடு அகமுடையார் மக்கள் மகாசபை மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் தமிழ்நாடு வீரத் தமிழர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் வழக்கறிஞர் அன்பு மணிகண்டன் சூரியன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘சிவகங்கை மாவட்டத்தில் மாமன்னர் மருதுபாண்டியர் சிலை அமைக்க கோரி சட்டமன்றத்தில் பொறுப்பற்ற பதில் அளித்த செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் சிலையை புறக்கணித்த பொறுப்பற்ற செயலை கண்டித்து மாமன்னர் மருது பாண்டியருக்கு சிவகங்கை மாவட்டத்தில் சிலை அமைக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தோறும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்’ என்று அவர் தெரிவித்தார்.