• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பெரம்பலூர் மாவட்டத்தில், தி.மு.க.வில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை

ByT.Vasanthkumar

May 19, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில், தி.மு.க.வில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 50 ஆயிரம் பேருக்கு புதிய உறுப்பினர் அட்டையை கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா வழங்கினார். ஒன்றிய,நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் பெற்றுக் கொண்டனர். மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில், தி.மு.க.வில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை தலைமை கழகத்தால் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, புதிய உறுப்பினர்கள் அட்டையை வழங்கினார். ஒன்றிய,நகர், பேரூர் கழகச் செயலாளர்கள் புதிய உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில்,மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ந.ஜெகதீஷ்வரன்,மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன்,
ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், பேரூர் செயலாளர்கள் ஏ.எஸ்.ஜாகிர்உசேன், ஆர்.ரவிச்சந்திரன், செல்வலெட்சுமி சேகர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர், அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், எம்.பிரபாகரன், ஆர்.அருண், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.