• Sun. Jun 16th, 2024

விவசாயிகளுக்கான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்

Byதி.ஜீவா

May 23, 2024

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் அரும்பாவூரில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் இணைப்புக் கல்லூரியான நாளந்தா வேளாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சி.சிவபாரதிதாசன், த.சங்கமேஸ்வரன், கி.திருமால்அழகன், வெ.ச.நவநீதம், ப.சரவணன், ம.விஷ்ணு, சி.சிவா, ச.யுகேஷ், ரா.யதுநந்தன், சி.விக்னேஷ் ஆகியோர் ஊரக வேளாண் பணி அணுபவத்திட்டத்தின் கீழ் களப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பூலாம்பாடி கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் மற்றும் பூலாம்பாடி கிராமத்தில் உள்ள பிளஸ் மேக்ஸ் ( plus Max) உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புடன் இணைந்து விவசாயிகளுக்கான வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம் மற்றும் இயற்கை விவசாயம் மற்றும் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.இந்நிகழ்வில் செங்குட்டுவன் ஊராட்சி மன்ற தலைவர், பூலாம்பாடி மற்றும் இராமராஜ் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சூரியபிரகாஷ் தலைவர் , பிளஸ் மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு , மற்றும் கால்நடை மருத்துவர் ,பூலாம்பாடி ஆகியோர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் விவசாயிகளுக்கு தேவையான உயிர் உரங்கள் மற்றும் இயற்கை நுண்ணுட்டக்கலவைகள், இயற்கை பூச்சி விரட்டிகளான அமிர்த கரைசல், தேமோர் கரைசல் , 5 ஜீ கரைசல், பஞ்சகாவியம் , தசகாவியம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் விவசாயத்தில் ட்ரோன் பயன்பாடுகள் , பாதுகாக்கப்பட்ட சூழலில் விவசாயம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் அரசு மானியத்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில் பூலாம்பாடி மற்றும் அதன் அருகில் உள்ள ஐந்திற்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *