பலருக்கு முன் உதாரணமாக இருந்து வந்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பொருளாதாரத்தில் அதீத ஞானம் கொண்டவர். அவரது ஆட்சி காலம் தான் இந்திய பொருளாதாரத்தின் பொற்காலம் எனக் கூறலாம். ஆனால் அவர் பதவியிலிருந்து இறங்கியதில் இருந்து நாட்டு நடப்பு மற்றும் இந்திய அரசியல் தொடர்பாக எதுவும் பேசுவதில்லை. இதற்கு காரணம் அவரின் வயது முதிர்ச்சி என கூட சிலர் கூறினர்.
அன்மையில் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது மீண்டு வந்துள்ளார். ஆனால் அவர் மோடி பிரதமராக பதவியேற்கும் போது சொன்ன ஒரு வார்த்தை இப்போதுவரை பிரபலமாக உள்ளது. அது என்னவென்றால் ‘Modi as PM will be a disaster for india’ என்பதாகும் இந்த வார்த்தையை நெட்டிசன்கள் அவ்வப்போது இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் மன்மோகன் சிங் தற்போது பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மன்மோகன் சிங் பிரதமர் மோடியை சரமாரியாக விமர்சித்துள்ளார்.
“நாட்டில் 7 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. மக்கள் வேலைவாய்ப்பு இன்மையாலும் பணவீக்கத்தாலும் அவதியுற்று வருகின்றனர். ஆனால் மோடி தன் தவறை ஒப்புக்கொள்ளாமல் மாறாக முதன்முதலாக பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு தான் அத்தனை தவறுக்கும் காரணம் என கூறி வருகிறார். இவ்வாறாக வரலாற்றில் பிழை கண்டுபிடிப்பது ஒரு நல்ல பிரதமருக்கு அழகல்ல. நான் பிரதமராக இருந்தபோது இந்திய வரலாற்றில் ஒருபோதும் குறைகூறியதுமில்லை. தேசத்தின் கௌரவத்தை விட்டுக் கொடுத்ததும் இல்லை எல்லைக்குள் ஊடுருவும் சீனாவை கட்டுப்படுத்தாமல், இதுகுறித்து வெளியிடப்படும் செய்தியை மட்டும் கட்டுப்படுத்துகிறார்கள். வெளியுறவு கொள்கையை கட்டாயமாக கடைபிடிப்பதும் பிரியாணி சமைத்துக் கொடுத்தாலும் ஊஞ்சலில் ஒன்றாக ஆடுவதாலும் எல்லாம் முடிந்து விடாது. இந்த அரசு பிரித்தாளும் கொள்கையை கடைபிடிக்கிறது. பிரித்தாலும் கொள்கை முதலில் இது மிகவும் ஆபத்தானது. பாஜக என்னை எப்போதுமே வலுவற்றவன், ஊமையாக இருப்பவன், ஊழல்வாதி என்றெல்லாம் விமர்சித்து இருக்கிறது. அதையெல்லாம் நான் பொறுத்துக் கொண்டேன். ஆனால் வரலாற்றை குறை கூறுவதை என்னால் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது.” என்று கூறியுள்ளார்.
- புதிய நாடாளுமன்ற கட்டிடம்… சு.வெங்கடேசன் எம்.பி. அதிர்ச்சி தகவல்புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற கட்டிடம் குறித்த […]
- பள்ளிகள் திறப்பு- சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவுகோடை விடுமுறை முடிந்து ப ள்ளிகள் வரும் 7 ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் […]
- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]
- சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை […]
- கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
- ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த […]
- போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!
- பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
- தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைதுதென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து […]
- கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடுகலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில […]
- நீங்கள் எப்போதும் ராஜாதான்..! ” – முதலமைச்சர் வாழ்த்துஎங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” – முதல்வர் ஸ்டாலின் இளையராஜவுக்குபிறந்த […]
- ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் […]