• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உயிரே போனாலும் பல்லக்கை சுமப்பேன் – மதுரை ஆதீனம்!

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கி செல்வதற்கு திராவிட கழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.இந்த நிலையில், தருமபுரம் ஆதினம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்ல தடை விதித்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி நேற்று உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில்,தனது உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் தானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுப்பதாகவும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

“அண்மையில் தமிழக ஆளுநர் தருமபுர ஆதீன மடத்துக்கு சென்றதே தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதிக்க காரணம்.ஆனால்,எனது உயிரே போனாலும் பரவாயில்லை,நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன்.500 ஆண்டுகளாக நடைபெறும் பாரம்பரியத்திற்கு தடை போடுவது வருத்தமளிக்கிறது.எனினும்,எனது குருவான தருமபுர ஆதீன பிரவேசத்தை உயிரைக் கொடுத்தாவது நடத்துவோம்”,என்று தெரிவித்துள்ளார்.