• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நான் அப்படி சொல்லவே இல்ல : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Byவிஷா

Apr 14, 2025

அதிமுக – பாஜக கூட்டணி உறுதியான பிறகு, அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விலகுவதாக தகவல்கள் வந்த நிலையில், நான் அப்படி சொல்லவே இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கட்சியில் இருந்து விலகுவதாக செய்திகள் பரவின. பின்னர், அது வதந்தி என்பது தெரிய வந்தது. இந்த நிலையில், அதிமுகவில் இருந்து விலகுவதாக நான் எப்போதும் சொல்லவே இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
நான் பதவியை விட்டு விலகுவதாக திருமாவளவன் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார், இது திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்யான செய்தி. நான் அப்படி சொல்லவில்லை. நான் பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்றது கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பாஜக கூட்டணிக்கு முதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருபவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். கடந்த தேர்தலில் தனது தோல்விக்கு காரணமே அதிமுக பாஜக கூட்டணிதான் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார். அதனால் பாஜகவுடன் கூட்டணி அமைக்கக்கூடாது என வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி உருவாகி உள்ளது. இதற்காக மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் (முன்னாள் அதிமுக அமைச்சர்) நியமிப்பட்டுள்ளார். இந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் இருந்து விலகுவதாக செய்திகள் பரவிய நிலையில், அது வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து விலகுவதாக நான் எப்போதும் சொல்லவே இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகதான் எனது உயிர் மூச்சு” என்றும் கூறி உள்ளார்.