• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அனைத்துக் கட்சியினரிடம் நட்புறவாக பழகுகிறேன்..,

ByKalamegam Viswanathan

Jul 4, 2025

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

நிகிதாவுக்கு பாஜக ஆர்.எஸ்.எஸ். தொடர்பு என்ற கேள்விக்கு.

அஜித் குமார் கொலை வழக்கை முதன் முதலில் வெளியே சொன்னது நான்தான். முதலில் வெளியே கொண்டு வந்ததற்கு பிறகு தான் மற்ற கட்சிகள் வந்தார்கள்.

இன்று அவர் வீட்டிற்கு எல்லாரும் செல்கிறார்கள். முழுக்க முழுக்க மதிப்பிற்குரிய செல்வப் பெருந்தகை அவர்கள் கூட்டணியில் இருக்கக்கூடிய முதலமைச்சர் தான் இதற்கு முழு பொறுப்பை ஏற்க வேண்டும்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் கூறியது குறித்த கேள்விக்கு:

தமிழக முதல்வர் ஓரணியில் தமிழ்நாடு என்று சொன்னார். இதனால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் உறுதியாக சேர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம் வருவதும் வராததும் அவர்களுடைய விருப்பம்.

திமுக வர வேண்டாம் என்ற எண்ணம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களெல்லாம் ஓரணியில் திரள வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

திமுக கூட்டணியில் நயினார் நாகேந்திரன் சலசலப்பை ஏற்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:

என்னைப் பொருத்தமட்டில் மதிப்புக்குரிய திருமாவளவனாக இருந்தாலும் சரி, செல்வப் பெருந்தையாக இருந்தாலும் சரி, முதல்வர் ஸ்டாலினாக இருந்தாலும் சரி ஒவ்வொரு இடத்திலும், நட்புணர்வுடன் தான் பழகினேனே தவிர சலசலப்பை ஏற்படுத்துவது என்னுடைய வேலை இல்லை.

ஆனால் முதல்வர் செய்ய வேண்டிய கடமையில் இருந்து தவறுகிறார் என்னும் போது ஒரு கட்சியினுடைய தலைவராக செயல்படுவது என்னுடைய கடமை.

ரிதன்யா தற்கொலை குறித்த கேள்விக்கு,

அதைப்பற்றி முழுமையாக தெரிந்த பிறகு என்னுடைய கருத்தை சொல்கிறேன் என நயினார் நாகேந்திரன் கூறினார்.