• Wed. Oct 29th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

மனைவியை உறுப்பில் கடித்த கணவர் – பல்செட்டை பிடுங்கி சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவு..!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னை விட 27 வயது மூத்தவரான தனது, 67 வயது கணவர் தன்னை உடலுறவின் போது துன்புறுத்துவதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தூரைச் சேர்ந்த அப்பெண்ணுக்கு, குஜராத்தைச் சேர்ந்த 67 வயதாகும் கிரிஷ் குமார் சோனி என்ற நகைத் தொழிலில் ஈடுபட்டுள்ள செல்வந்தருடன் கடந்த ஆண்டு அக்டோபர் 28-ம் தேதியன்று திருமணம் நடந்துள்ளது. அப்பெண்னை விட அவரது கணவர் 27 வயது மூத்தவர் ஆவார். இருவருக்குமே இது 2-ம் திருமணம். திருமணத்துக்கு பிறகு அப்பெண் குஜராத்தில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், முதலிரவு அன்றே வயதான கணவர் தன்னுடன் செக்ஸில் ஈடுபடும் போது தனது உடல் முழுவதும் பல்லால் கடித்து வைத்ததாக அப்பெண் கூறியுள்ளார். மேலும், பிறப்புறுப்பு உட்பட அவரின் உடல் முழுவதும் தனது கணவர் கடித்து வைத்ததால் அப்பெண் காயமடைந்திருக்கிறார். ஒவ்வொரு முறை உடலுறவில் ஈடுபடும் போது அவரின் கணவர் இதே போல கொடூரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இத்தனைக்கும் அந்த கணவருக்கு வயோதிகம் காரணமாக பற்கள் அனைத்தும் விழுந்துவிட்டன. அவர் பல்செட் தான் பொருத்தி உள்ளார்.
கணவரின் இந்த கொடூரத்தை அவரின் மனைவி எதிர்த்த போது, அவரின் கணவர் அவரை மிரட்டியிருக்கிறார். தன்னிடம் பெரும் பணம் இருப்பதாகவும், தனக்கு ஏராளமான முக்கியப் பிரமுகர்களுடன் தொடர்பு இருப்பதாகவும், இதுகுறித்து வெளியே கூறினால் உனக்கும் உனது குடும்பத்தாருக்கும் ஆபத்து ஏற்படும் என அவர் தனது மனைவியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவரின் கொடுமை தாங்கமுடியாமல் கடந்த டிசம்பர் மாதம் வீட்டில் இருந்து தப்பித்து இந்தூருக்கு வந்து அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்து கணவர் மீது மனைவி புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் மனைவி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட, கணவர் கடித்ததால் ஏற்பட்ட காயங்கள் குறித்த புகைப்படங்களை கண்டு திகைத்துள்ளார். கணவரை உடனடியாக கைது செய்யும்படியும், அவருடைய பல்செட்டை பிடுங்கி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படியும் போலீசாருக்கு உத்தரவிட்டார். மனைவி புகார் அளித்த நிலையில் கடந்த டிசம்பர் 7-ம் தேதி முதல் அப்பெண்ணின் கணவர் தலைமறைவாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.