ஆரல்வாய்மொழியை அடுத்த சீதப்பால் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் (84) ஓய்வு பெற்ற ராணுவ வீரர். ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அலெக்சாண்டர், இவரது மனைவி ரோஸ்லின் ஓய்வுபெற்ற ஆசிரியை. இவர்களது மகன் டேனியல், மகள் ஷீபா இருவரும் அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர்.
மகள் ஷீபாவின் கணவர் மாடி வீட்டிலும் முதியவர்கள் இருவரும் கீழ் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள்.
ஓய்வுபெற்ற ராணுவ வீரருக்கும் அவரது மனைவி ரோஸ்லின் இடையை அடிக்கடி சண்டை ஏற்படுவது வாடிக்கையாம். நேற்று (செப்டம்பர்_21)ம் தேதி முதிர் தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரம் அடைந்த கணவர் மனைவியை தாக்கியுள்ளார்.
தலையில் பட்ட அடியால் மயக்கம் அடைந்தவர் அருகில் உள்ள கட்டிலில் மயங்கிய நிலையில் கிடந்த போது, ஆத்திரம் அடங்காத ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கத்தியால் மனைவியின் கழுத்தை வெட்டிய போது, இரத்தம் பீரிட்டு கட்டிலில் வடிந்து தரையிலும் வடிந்துள்ளது.
வீட்டில் பிணத்தை வைத்துக்கொண்டு அடுத்த அறையில் மனைவியை கொலை செய்த பதட்டம் ஏதும் இன்றி இரவில் துயில் கொண்டவர் இன்று அதிகாலை எழுந்து வீட்டின் அருகில் உள்ள பெண்ணிடம் மனைவியை கொலை செய்துவிட்டதை தெரிவித்துள்ளார்.
மனைவியை, கணவரே கழுத்தை வெட்டி கொலை செய்த தகவல் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தெரிவித்த நிலையில், இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் தலைமையில் சென்ற காவலர்கள் சம்பவம் இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட போது, ஓய்வுபெற்ற ராணுவ வீரர் தான் மனைவியை கொலை செய்ததை காவல்துறை அதிகாரியிடம் ஒப்புக்கொண்ட நிலையில் கணவர் அலெக்சாண்டரை கைது செய்து மேல் விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து சென்றதுடன், ஓய்வு பெற்ற ஆசிரியயை ரோஸ்லின் உடலை கைப்பற்றி உடற்கூர் ஆய்விற்கு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ரோஸ்லின் கொலை செய்யப்பட்ட தகவல் அமெரிக்காவில் இருக்கும் மகன், மகளுக்கு உறவினர்கள் தெரிவித்தனர்.