கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் தாலூகா, ஆற்றூர் வருவாய் கிராமம். ஆற்றூர் பேரூராட்சி பகுதியில் உள்ள ஏற்றங்கோடு அணஞ்சான்விளையில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் அரசின் அனுமதி இன்றி செயல்படும் அலுமினியம் ஆலையை அகற்றக் கோரி, தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் தினகரன் தலைமையில், ஆற்றூர் பேரூராட்சி அலுவலகம் முன் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் என அறிவித்த தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் அறிவித்தபடி இன்று (ஜூலை_11)காலை போராட்டத்த்தை தொடங்கி கோசங்களை எழுப்பிய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தினகரன், ராமதாஸ் உட்பட ஆண்கள், ஏராளமான பெண்களை, காவல்துறையால் கைது செய்யப்பட்டு, திருவட்டார் காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள கல்யாண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

போராட்டம் குறித்து தினகரனிடம் கேட்டபோது..,
குடியிருப்பு பகுதியில் சுகாதார கேட்டை உருவாக்கும் அலுமினியம் ஆலைக்கு எதிராக கடந்த 50,நாட்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அடையாள போராட்டம் நடத்தி வருகிறோம், ஆட்சியர் அலுவலகம் முன் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினோம்.


உயிர்க்கொல்லி நச்சு ஆலைக்கு எதிராக எங்களின் கடைசி போராட்டமாக தீர்வு கிடைக்கும் வரை, இன்று சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட எங்களை திருவட்டார் காவல் துறை கைது செய்துள்ளது. ஜனநாயக படியான போராட்டத்தை காவல்துறை அடக்க நினைக்கிறது என தினகரன் குற்றம் சாட்டினார்.
