• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்..,

விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள காந்தி சிலையின் கீழ் விருதுநகர் பாராளு மன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் தலைமையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டத்தை சீர்குலைக்கும், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து ஞாயிற்று கிழமை காலை முதல் மாலை வரை உண்ணாவிரத போராட்டம் நடை பெற்றது.

இதில் சிவகாசி MLA அசோகன், நகர தலைவர் நாகேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெயில்முத்து, பாலகிருஷ்ணன், விருதுநகர் காங்கிரஸ் பிரமுகர் சிவகுருநாதன், மற்றும் அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர் நகர தலைவர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில் “இங்கே வந்திருக்கும் அனைவரும் ரூ 200, குவாட்டர்,பிரியாணிக்கு வரவில்லை மாறாக நமது MP மாணிக் தாகூர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த இருக்கிறார் என்பது அறிந்து வந்துள்ளனர். அமித்ஷா, மோசடி ( மோடிஜி) போன்றோர்கள் மகாத்மா காந்தியின் பெயர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இடம் பெற கூடாது என்று செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் நாட்டில் உள்ள திருடர்கள் அனைவரும் குஜராத்தில் உள்ளனர்” என்றார். இதற்கு பின் பேசிய நிகழ்ச்சி தொகுப்பாளர் சிவகுருநாதன் “தனி மனித தாக்குதல் இன்றியும், அனைவருக்கும் புரியும் வகையில் பொருள் பட பேசுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அனைவரும் பாரத பிரதமர் மோடி அவர்களை வசைபாடிய வகையில் பேசினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி வழக்குரைஞர் ஒருவன் மட்டும் கண்ணியத்துடன் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு உண்ணா விரத மேடையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பேசி கொண்டிருக்கும் போது காங்கிரஸ் தொண்டர்கள் டீ கடைகளில் வடைகளை காலி செய்து கொண்டும் பெண்கள் இருக்கைகளில் உறங்கி கொண்டும் இருந்தனர். மாலையில் இறுதியாக பேசிய மாணிக் தாகூர் “கடந்த முறை நடந்த தேர்தலில் நமது ராகுல் காந்தி பல முறை தமிழகத்தில் பிரச்சாரம் செய்து தளபதி ஸ்டாலினை முதல் முறையாக முதல்வர் பதவியில் அமர வைத்தார்.

நாம் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றோம். இருப்பினும் நாம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை, ஏனென்றால் நாம் ஆட்சியிலும் இல்லை, எதிர் கட்சியாகவும் இல்லை. நமது கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் கேட்க தயாராக இல்லை. நமது காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில தலைவர் தமிழகத்திற்கு வருகைதந்து விசாரித்த போது ” தற்போது நாம் கூட்டணியில் தான் உள்ளோம் ஆனால் எந்த பலனும் இல்லை, மரியாதையும் இல்லை என்று கூறினார்கள், ஆகவே நாம் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று நமது காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் தெரிவித்தனர்.

அவரும் தமிழக முதல்வர் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே போன்றவர்களிடம் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற நமது கோரிக்கையை தெரிவிப்பதாக கூறியுள்ளார். காமராஜர் பிறந்த பூமியில் மகாத்மா காந்தியின் சிலையின் கீழ் உள்ள இந்த இடத்தில் இருந்து நான் கூறுகிறேன் இனி வருங்காலம் நமதே” என்று கூறி தனது உரையை முடித்து கொண்டார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாணிக் தாகூர் சான்றிதழ் வழங்கினார். இறுதியாக தொண்டர்களுக்கு குளிர் பானமும் புரோட்டா பார்சல்கள் வழங்கப்பட்டது.