ம.ம.க 17ஆம் ஆண்டு துவக்க விழாவில், மருத்துவமனை நோயாளிகளுக்கு பிஸ்கட், பழங்கள், ஹார்லிக்ஸ் வழங்கி கொண்டாடினர்.
மனிதநேய மக்கள் கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கம்பம் நகர மமக சார்பாக, இன்று கம்பம் அரசு பொது மருத்துவமனையில் பிரசவ வார்டு, மகளிர் வார்டு, குழந்தைகள் வார்டு பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரட்,பிஸ்கட், ஆப்பிள், ஹார்லிக்ஸ் பால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி, மாவட்ட துணை தலைவர் சலீம் பாட்ஷா, கம்பம் நகர தலைவர் தமீமுன் அன்சாரி, மாவட்ட ஐபிபி செயலாளர் ஹக்கீம், மாவட்ட மருத்துவச் செயலாளர் யூசுப் அன்சாரி, கம்பம் நகர பொருளாளர் ஜெய்லானி, துணைச் செயலாளர்கள் ஷாஜகான், முகமது ஆசிக், ஆட்டோ சங்க நிர்வாகி சபிக் ராஜா, மருத்துவஅணி செயலாளர் முஜாஹித் மற்றும் அம்ஜத் கான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

