விருநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் அரசு கலைக்கல்லூரியில் அக்டோபர் 11ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
விருதுநகர் மாவட்ட சுற்று வட்டாரத்தில் வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு அமைந்துள்ளது. வரும் அக்டோபர் 11-ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு அரசு நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தேவாங்கர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது. வேலைநாடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்கள் பகுதியிலேயே தனியார் நிறுவனத்தில் பணி வாய்ப்பை பெறலாம். அனைவருக்கும் அனுமதி இலவசம்.
தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் மாவட்ட அளவில் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களின் உள்ள பணியிடங்கள் சேகரிக்கப்பட்டு, வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து வருகிறார்கள். அதன்படி இதுவரை ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.
விருநகர் மாவட்ட நிர்வாகம், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதன் மூலம் சுமார் 10,000 காலிப்பணியிடங்களுக்கு மேல் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வேலை தேடும் இளைஞர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டையில் அக்.11ல் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
